தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறையினரால் இரண்டு தமிழர்கள் கைது

Toronto காவல்துறையினரின் துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைதாகியுள்ளனர்.

கடந்த June மாதம் ஆரம்பமான Toronto காவல்துறையின் முக்கிய குற்றப்பிரிவு குற்றவியல் விசாரணையின் எதிரொலியாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

Brampton நகரை சேர்ந்த 29 வயதான ஜான்சன் ஜெயகாந்தன் (Janson Jeyakanthan), 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன்  (Jayson Jeyakanthan) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஜெய்சன் ஜெயகாந்தன் – Jayson Jeyakanthan

கைதான இருவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (20) தங்கள் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த துப்பாக்கி குறித்த விசாரணையில் மேலும் இருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.

Torontoவை சேர்ந்த 36 வயதான Jahmal Palmer, Torontoவை சேர்ந்த 29 வயதான Paul Richards ஆகியோரை கால்வதுறையினர் தேடி வருகின்றனர்.

Paul Richards
Jahmal Palmer

 

இவர்கள் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் அவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்களை தங்களை தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளனர்.

Related posts

April மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் வரவு செலவு திட்டம்

Lankathas Pathmanathan

நினைவு தின நிகழ்வுகளில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு!

Lankathas Pathmanathan

Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாவீரர்களாக நினைவு கூரல்

Lankathas Pathmanathan

Leave a Comment