December 12, 2024
தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் விரைவில் நியமனம்

கனடிய பொது தேர்தல்களில்  வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாட்களில் அல்லது வாரத்தில் இது குறித்த அறிவித்தல் வெளியாகும் என பிரதமர் Justin Trudeau இன்று கூறினார்.

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளரை நியமிப்பதாக கடந்த வாரம் பிரதமர் அறிவித்திருந்தார்.

கடந்த இரண்டு தேர்தல்களில் சீனாவின் தலையீடுகள் குறித்த கனேடியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தல் வெளியானது.

இவர் பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கவுள்ளார்.

எமது ஜனநாயக செயல்முறைகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனம் அமையும் என பிரதமர் கூறியிருந்தார்.

ஆனாலும் இந்த விடயத்தில் ஒரு பொது விசாரணைக்கு Conservative தலைவர் Pierre Poilievre மீண்டும் அழைப்பு விடுத்தார்.

Related posts

குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தாய் மீது பதிவு

Lankathas Pathmanathan

பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment