கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய வங்கி தனது வட்டி வீதத்தினை தொடர்ந்தும் 4.5 சதவீதமாக வைத்திருக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி புதன்கிழமை (08) காலை வட்டி விகித முடிவை அறிவித்தது.
பணவீக்க மதிப்பீடு, சமீபத்திய பொருளாதார தரவுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், வட்டி விகிதத்தை சீராக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக, கனடா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இறுதி வட்டி விகித அறிவிப்பு January மாதம் 25ஆம் திகதி வெளியானது.
அன்று கால் சதவீத புள்ளி விகித உயர்வை மத்திய வங்கி அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம் மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கனடிய பொருளாதாரமும், பணவீக்கமும் குறைவதாக சமீபத்திய பொருளாதார தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த நான்காவது காலாண்டில் கனேடிய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்யவில்லை என்ற போதிலும், January மாதத்தில் கனடாவில் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது என சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.