February 23, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரேனுக்காக கனடாவின் ஆதரவுக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் நன்றி

உக்ரேனுக்கான மேலதிக ஆதரவை கனடா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கனடாவுக்கான பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் ஆதரவை அதிகரிப்பதை குறிக்கோளாக கொண்டு இந்த பயணத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

இவர் கனடிய பிரதமர் Justin Trudeauவை செவ்வாய்க்கிழமை (07) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உக்ரேனுக்கான மேலதிக உதவிகளை பிரதமர் அறிவித்தார்.

குறைந்தபட்சம் எதிர்வரும் October மாதம் வரை உக்ரேனில் பொறியியல் பயிற்சியை வழங்குவதற்கான பணியை கனடா நீடிக்கும் என Trudeau கூறினார்.

உக்ரேன் படைகளுக்கு யுத்த மருத்துவத்தில் உதவ, கனேடிய மருத்துவப் பயிற்சியாளர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்ததார்.

உக்ரேனுக்காக ஐரோப்பிய பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் கனடா ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், உக்ரேனுக்காக அதன் நியாயமான பங்கை விட அதிகமாகச் செய்து வருகிறது என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கனடாவின் இந்த உதவிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கனடா ஐரோப்பாவுடன் மேற்கொள்ளும் புதிய hydrogen ஒப்பந்தம் குறித்தும் அறிவிக்ப்பட்டது.

Liberal அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையொப்பமிட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், முதலீடுகள் பெருகும் வாய்ப்புள்ளது எனவும், மேலும் வணிக முயற்சிகள் பெருகும் என்பதோடு, நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகும் எனவும் பிரதமர் Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

கனடாவுக்கு வரும் பயணிகளில் தனிமைப்படுத்தலை மறுத்தவர்களுக்கு அபராதம்!

Gaya Raja

Toronto நகர முதல்வருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

ஹெய்ட்டி நெருக்கடி குறித்த அவசர கூட்டத்தில் Bob Rae பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment