தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்: Conservative

Liberal அரசாங்கம் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகளை விசாரிக்க ஒரு உண்மையான, சுதந்திரமான கண்காணிப்புக்குழுவை நியமிக்கும் என்ற நம்பிக்கையை தாம் இழந்துள்ளதாக Conservative கட்சி தெரிவிக்கின்றது.

கனடாவின் கடந்த இரு தேர்தல்களில் சீனா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சில வாரங்களுக்குள் சிறப்பு அறிக்கையாளரை நியமிப்பதாக Justin Trudeau உறுதியளித்துளார்.

இந்த நிலையில் Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் Trudeau தனக்கு நெருக்கமான ஒருவரை, அல்லது தனது அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவரை இந்த பிரச்சினையைக் கவனிக்கும் சிறப்பு அறிக்கையாளராக தேர்ந்தெடுப்பார் எனவும் Poilievreகூறினார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த பிரதமர் Trudeau , குறித்த நியமனத்துக்கான பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகக் தெரிவித்தார்.

Related posts

கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட தொற்றின் திரிபுகள் உறுதிப் படுத்தப்பட்டன!

Gaya Raja

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment