December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மாகாணத்தை மீண்டும் தாக்கும் பனிப்புயல்

Ontario மாகாணத்தை மீண்டும் ஒரு பனிப் புயல் தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமைக்குள் (04) தெற்கு Ontario முழுவதும் 10 முதல் 20 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பனிப்பொழிவு வெள்ளிக்கிழமை (03) மதியம் ஆரம்பிக்கும் என வானிலை அவதான நிலையம் கூறுகிறது.

Ontario தவிர Quebec. Atlantic கனடா பகுதிகளிலும் பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் கனடா, Nova Scotia, New Brunswick, Prince Edward Island ஆகிய மாகாணங்களுக்கு சிறப்பு வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

Nova Scotia, New Brunswick ஆகிய மாகாணங்களில் 15 முதல் 25 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Prince Edward Islandடில் 15 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தேசிய மக்கள் சக்தி தலைவரை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan

New Brunswick அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவில் 700ஐ அண்மிக்கும் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி!

Gaya Raja

Leave a Comment