February 21, 2025
தேசியம்
செய்திகள்

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

British Colombia மாகாண வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை கணிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (28) அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் புதிய செலவு நடவடிக்கைகளும் வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த ஆண்டு British Colombia மாகாணம் ஆரம்பிக்கும் புதிய செலவின நடவடிக்கைகளை நிதியமைச்சர் Katrine Conroy அறிவித்தார்.

2024-25 ஆம் நிதியாண்டில் $3.7 பில்லியன், 2025-26 ஆம் நிதியாண்டில் $3 பில்லியன் கூடுதல்
பற்றாக்குறையையும் அரசாங்கம் கணித்துள்ளது.

இதன் விளைவாக, மாகாணத்தின் மொத்த கடன் 93 பில்லியன் டொலரில் இருந்து 2026ஆம் ஆண்டுக்குள் 134 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும்

Lankathas Pathmanathan

அடுத்த ஐம்பது ஆண்டுக்குள் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும்

Lankathas Pathmanathan

Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு இருக்கும்: Jason Kenney

Gaya Raja

Leave a Comment