கனடியர்களுக்கான செய்திகளை கட்டுப்படுத்தும் Google நிறுவனத்தின் முடிவு குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியம் கொடுப்பதை விட, கனடியர்களுக்கான செய்திகளை தடுப்பதற்கு Google முடிவு செய்துள்ளதாக Trudeau குற்றம் சாட்டினார்.
இது ஒரு தவறான முடிவு என தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.
தனது கனேடிய பயனர்களில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு செய்திகளுக்கான அனுமதியை தடுப்பதாக இந்த வார ஆரம்பத்தில் Google உறுதிப்படுத்தியது.
Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் குறுகிய கால சோதனை நடவடிக்கையாக Google நிறுவனம் இதனை கருதுகிறது.
Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி சட்டத்தை Google எதிர்க்கிறது.