December 12, 2024
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau பங்கேற்றார்.

உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (24) கனடாவின் பல பகுதிகளில் நடைபெற்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

Torontoவில் வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் ஒற்றுமை பேரணி ஒன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பிரதமர் Justin Trudeau தவிர, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், Conservative தலைவர் Pierre Poilievre, Ontario பிரதமர் Doug Ford உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடியர்களின் ஆயுட்காலம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan

கனடியர்கள் ஒரு தேர்தலை விரும்புகின்றனர்? – பிரதமரின் கருத்து!

Lankathas Pathmanathan

Leave a Comment