தேசியம்
செய்திகள்

தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியின் கனடிய பயணத்திற்கு Conservative தலைவர் கண்டணம்

Freedom Convoy இயக்கத்திற்கு ஆதரவாக இந்த வாரம் கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியின் இனவெறி கருத்துக்களை Conservative தலைவர் கண்டித்துள்ளார்.

தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியான Christine Anderson இந்த வாரம் கனடிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

Calgary, Toronto, Whitby ஆகிய இடங்களில் சந்திப்புகளை மேற்கொண்ட இவர், வெள்ளிக்கிழமை (24) Montrealலில் ஒரு சந்திப்புடன் தனது கனடிய பயணத்தை முடித்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான இவரை மூன்று Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த நிலையில் கட்சி தலைவரின் இந்த கண்டனம் வெளியானது.

Ontario மாகாண Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களான Colin Carrie, Dean Allison ஆகியோருடன் முன்னாள் தலைமை போட்டியாளர் Leslyn Lewis ஆகியோர் இவரை இந்த வாரம் சந்தித்தனர்.

இவரது மோசமான கருத்துக்களை தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்கவில்லை என கூறிய Pierre Poilievre, அவரை சந்தித்ததற்கு அவர்கள் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

அவரும், அவரது வெறுக்கத்தக்க இனவெறி கருத்துகளும் கனடாவில் வரவேற்கப்பட வில்லை எனவும் ஒரு அறிக்கையில் Pierre Poilievre கூறினார்.

Related posts

CRB பெறவேண்டுமா? வரித் தாக்கல் செய்யுங்கள்!

Gaya Raja

கனடா- அமெரிக்கா உறவின் நட்பும் உறுதியும் தொடரும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

Leave a Comment