அமெரிக்க ஜனாதிபதியின் கனடிய பயணத்தின் போது பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
Quebec மாகாணத்தின் Montrealலுக்கு தெற்கே உள்ள அதிகாரப்பூர்வமற்ற Roxham வீதி எல்லை கடவையை
மூடுமாறு எதிர்க்கட்சியின் அழுத்தத்தை பிரதமர் எதிர்கொள்கிறார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியிடம் பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதியுடனான நேரடி உரையாடல்களில் இந்த விடயத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
அதிகாரப்பூர்வமற்ற Roxham வீதி எல்லை கடவையை 30 நாட்களுக்குள் மூட வேண்டும் என Conservative கட்சி தலைவர் Pierre Poilievre தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார் .