கனடாவின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகளில் விரைவான அதிகரிப்பை தொடர்ந்து, கனடாவின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 இல் முதன் முதலில் ஆரம்பித்த பணவீக்க விகித அதிகரிப்பு, கடந்த ஆண்டு வியத்தகு முறையில் உயர்ந்தது.
பணவீக்கம் கடந்த கோடையில் 8.1 சதவீதமாக உயர்ந்தது.
இது கனடிய வங்கி பராமரிக்க வேண்டிய இரண்டு சதவீத பணவீக்க இலக்கை விட அதிகமாகும்.
பணவீக்கம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் சுமார் மூன்று சதவீதமாகக் குறையும் எனவும், 2024ஆம் ஆண்டு இரண்டு சதவீதமாகக் குறையும் எனவும் கனடிய மத்திய வங்கி கணித்துள்ளது.