கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் கனடாவின் கடுமையான குளிர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
வியாழக்கிழமை (23) குளிர் எச்சரிக்கை, வடக்கு British Colombia பகுதிகள், Alberta, Saskatchewan, Manitobaவின் தெற்குப் பகுதி, வடக்கு Ontario, வடக்கு Quebec , Newfoundland, Labrador, மூன்று பிராந்தியங்களில் சில பகுதிகளில் அமுலில் உள்ளது.
கடுமையான குளிர் எச்சரிக்கை காரணமாக Albertaவில் வியாழனன்று குளிர் நிலை -40 பாகை செல்சியஸ் வரையும் , Nunavutடில் -55 பாகை செல்சியஸ் வரையும் உணரப்படும் என எதிர்வு கூறப்பட்டது.
Pearson சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 சென்டி மீட்டர் பனிபொழிவு பதிவானதாக வியாழக்கிழமை மாலை சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
ஆனாலும் இந்த கடுமையான குளிர் நிலை, பனிப்பொழிவு என்பன தொடராது என வானிலை அவதான நிலையம் கூறுகிறது.