Ontario மாகாண அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தை March மாதம் 23ஆம் திகதி தாக்கல் செய்கிறது.
நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (23) இதனை அறிவித்தார்.
நிச்சயமற்ற பொருளாதார காலங்களில் Ontarioவிற்கு ஒரு வலுவான எதிர்காலத்தை இந்த வரவு செலவுத் திட்டம் கோடிட்டுக் காட்டும் என அவர் கூறினார்.
தொற்று காலத்தில் Ontario மாகாணம் தாக்கல் செய்த அதிக செலவு, பெரிய பற்றாக்குறை கொண்ட வரவு செலவுத் திட்டங்கள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளதாக நிதியமைச்சர் கடந்த வாரம் கூறினார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் Ontario 2022-23 நிதியாண்டில் $6.5 பில்லியன் பற்றாக்குறையைப் பதிவு செய்தது.
Ontario அரசின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கையிலிருந்து இது $6.4 பில்லியன் முன்னேற்றமாகும்.
இதற்கிடையில், இந்த நிதியாண்டில் $2.5 பில்லியன் பற்றாக்குறையை நிதிப் பொறுப்புக்கூறல் அலுவலகம் கணித்துள்ளது.