தேசியம்
செய்திகள்

தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

தொற்றின் இரண்டாம் ஆண்டில், COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே 600 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது

2020-2021 ஆம் ஆண்டில், தொற்றின் காரணமாக இந்த வயதெல்லையில் 325 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் 2021-2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்தது.

இந்த வயதினரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு COVID ஆறாவது காரணி என வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

Quebec இடைத் தேர்தலில் Bloc Québécois வெற்றி!

Lankathas Pathmanathan

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

Leave a Comment