தேசியம்
செய்திகள்

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Toronto நகர முதல்வராக John Toryயின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமை (17) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

68 வயதான அவர், 2014ஆம் ஆண்டு Toronto நகர முதல்வராக முதலில் பதவியேற்றார்.

வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் அவர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்தப் பதவியை விட்டு விலகுவது தனக்கு பெரும் கவலை அளிப்பதாக கூறிய John Tory, ஆனாலும் அதுவே சரியான முடிவு எனவும் தெரிவித்தார்.

தனது பதவி விலகல் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் என்பன தனது நகர முதல்வர் பதவி காலத்தை நினைவு கூரப்படும் விடயங்களில் ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும் ஒன்பது வருட பதவிக்காலத்தில் தனது ஏனைய சாதனைகளும் நினைவு கொள்ளப்படும் எனவும் John Tory நம்பிக்கை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் Toronto நகர முதல்வரின் சில பொறுப்புகளை நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie பொறுப்பேற்றார்.

Related posts

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

அரசியலில் இருந்து விலகும் Ontarioவின் துணை முதல்வர்

Lankathas Pathmanathan

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

Lankathas Pathmanathan

Leave a Comment