தேசியம்
செய்திகள்

Toronto உயர்நிலைப் பாடசாலைக்கு வெளியே 15 வயது மாணவர் மீது துப்பாக்கி சூடு

Toronto உயர்நிலைப் பாடசாலைக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 வயது மாணவர் காயமடைந்தார்.

காயமடைந்த 10ஆம் ஆண்டு மாணவர் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Weston உயர் நிலைப் பாடசாலையின் வாகன தரிப்பிடத்தில் வியாழக்கிழமை (16) மதியம் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான வாகனம் குறித்த விபரங்களை புலனாய்வாளர்கள் வெளியிடவில்லை.

Toronto பெரும்பாக பாடசாலைகளில் கடந்த மாதங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.

Related posts

விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

பிரதமர் Trudeau – முதல்வர் Ford சந்திப்பு

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment