முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallionனின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (14) காலை நடைபெறவுள்ளது.
திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது
Hazel McCallion தனது 101ஆவது வயதில் கடந்த மாதம் 29ஆம் திகதி காலமானார்.
தொடர்ந்து 36 வருடங்கள் Mississauga நகர முதல்வராக McCallion பதவி வகித்தார்.
1978ஆம் ஆண்டில் முதலில் Mississauga நகர முதல்வராக பதவி ஏற்ற McCallion தொடர்ந்தும் 2014ஆம் ஆண்டுவரை அந்தப் பதவியில் இருந்தார்.