December 12, 2024
தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க முதல்வர்கள் முடிவு

பிரதமர் Justin Trudeauவின் 10 ஆண்டு கால சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க கனடாவின் முதல்வர்கள் தீர்மானித்துள்ளனர்.

மத்திய அரசின் நிதி உதவியை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளதாக Manitoba முதல்வர் Heather Stefanson கூறினார்

திங்கட்கிழமை (13) நடைபெற்ற முதல்வர்கள் கலந்து கொண்ட மெய்நிகர் கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசாங்கத்துடனான இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் முதல்வர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

மாகாணங்கள், பிரதேசங்களுக்கு சுகாதார நிதியுதவியை அடுத்த 10 ஆண்டுகளில் 196.1 பில்லியனாக அதிகரிக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதில் 46.2 பில்லியன் டொலர் புதிய நிதி உதவியும் அடங்குகிறது.

ஆனாலும் புதிய நிதி உதவி தமது தேவைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது முதல்வர்களின் நிலைப்பாடு என முதல்வர் Heather Stefanson கூறினார்.

இந்த விடயம் குறித்து முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

எதிர்காலத்தில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கலாம்?

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja

இலங்கை வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment