சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கனேடிய அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது
வடகிழக்கு சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு கனேடிய ஆண்களை திருப்பி அனுப்புவதற்கான மத்திய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து Justin Trudeau அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நான்கு பேரும் குர்திஷ் அதிகாரிகளால் நடத்தப்படும் சிறைகளில் 2019 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால்,கனேடிய பெண்களையும் குழந்தைகளையும் திரும்ப அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் முடிவில் ஆண்களை விலக்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது என கடந்த மாதம் மத்திய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
மத்திய அரசு எந்த அடிப்படையில் இந்த தீர்ப்பை எதிர்த்துப் போராடப் போகிறது என்பதை மேல்முறையீட்டு மனுவில், கோடிட்டுக் காட்டியது.
ஆண்கள் தொடர்பான இந்த முறையீடு 23 கனேடிய பெண்கள், குழந்தைகளை திருப்பி அழைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.