தேசியம்
செய்திகள்

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மெழுகுவர்த்தி அஞ்சலி

Quebec மாகாணத்தின் Laval குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு பலரும் தமது ஆதரவை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Montreal புறநகர்ப் பகுதியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (08) காலை மாநகரப் பேரூந்து மோதியதில் நான்கு வயதான இரண்டு குழந்தைகள் இறந்தனர் – ஆறு பேர் காயமடைந்தனர்.

மெழுகுவர்த்தி அஞ்சலி

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் வியாழக்கிழமை (09) மாலை Laval நகரின் ஏற்பாட்டில் உள்ளூர் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் பிரார்த்தனை ஒன்று நிகழ்ந்தது

இதில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.

பிரதமருடன் நகர முதல்வர் Stéphane Boyer உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த மெழுகுவர்த்தி பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

Quebec முதல்வர் அஞ்சலி

சம்பவ இடத்திற்கு வியாழன் மாலை நேரில் சென்ற Quebec முதல்வர் François Legault அங்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

மாகாண எதிர்க்கட்சித் தலைவர்களும் சம்பவ இடத்தில் சமூக உறுப்பினர்களுடன் சந்திப்புகளை முன்னெடுத்தனர்.

Quebec சட்டமன்றத்தில் கொடி வியாழன் காலை அரை கம்பத்திற்கு தாழ்த்தப்பட்டது.

Montreal நகர மண்டபம், Olympic மைதானம், Torontoவில் உள்ள CN கோபுரம் ஆகியவற்றில் உள்ள விளக்குகள் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக புதன்கிழமை அணைக்கப்பட்டன.

இதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறு சிறுவர்களில் இருவர் வியாழனன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் பேரூந்தின் சாரதியான 51 வயதான Pierre Ny St-Amand கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட இவர், இரண்டு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

புதன் பிற்பகல், அவர் மருத்துவமனையில் இருந்தபடி நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்

அவர் மீண்டும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார்.

Related posts

Ontario மாகாண சபை உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் வாடகை வருமானம் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

Lankathas Pathmanathan

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment