நிலநடுக்கத்தின் பின்னரான நிலை குறித்து ஆராய துருக்கிக்கு இராணுவ மதிப்பீட்டுக் குழுவை கனடா அனுப்பியுள்ளது.
ஆயிரக்கணக்கானோரை பலிகொண்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தை அடுத்து, கனேடிய இராணுவ மதிப்பீட்டுக் குழு புதன்கிழமை (08) துருக்கி நோக்கிச் சென்றுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனடிய மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் செவ்வாய்கிழமை (07) துருக்கிக்கு பயணித்தனர்.
பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கும், சிரியாவுக்கும் $10 மில்லியன் நிதியுதவியை செவ்வாய்கிழமை கனடா அறிவித்தது.
ஆரம்ப நிவாரண உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தலை சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan வெளியிட்டார்.
அதேவேளை செஞ்சிலுவை சங்கத்திற்கு கனேடியர்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு நிகராக $10 மில்லியன் வரை மத்திய அரசாங்கம் வழங்கும் எனவும் புதன்கிழமை பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
சிரியாவிலும், துருக்கியிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000ஐ நெருங்கியுள்ளது.