துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கம் குறித்த அறிக்கைகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன என Trudeau கூறினார்.
குறுகிய காலத்தில் எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பது குறித்து தனது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் திங்கட் கிழமை (06) கேள்வி நேரத்தல் கூறினார்.
இந்த கொடூரமான நிகழ்விலிருந்து சமூகங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு ஆதரவு தேவைப்படும் என்பதையும் Trudeau நினைவு படுத்தினார்.
இந்த நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,400க்கும் அதிகம் என அஞ்சப்படுகிறது .