தேசியம்
செய்திகள்

Ontario மாகாண NDPயின் புதிய தலைவர் அறிவிப்பு

Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Marit Stiles அறிவிக்கப்பட்டார்.

Ontario NDP தலைவராக Marit Stiles அதிகாரபூர்வமாக பெரும்பான்மை வாக்குகளால் உறுதி செய்யப்பட்டார்.

சனிக்கிழமை (04) இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இதன் மூலம் Marit Stiles Ontario சட்டமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி தலைவராகிறார்.

Torontoவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தலைமைக்கான வாக்கெடுப்பின் மூலம் NDP கட்சி புதிய தலைவராக Marit Stilesசை உறுதிப்படுத்தியது.

இன்று Doug Ford அரசாங்கத்தின் முடிவுக்கான ஆரம்பம் என ஆதரவாளர்கள் மத்தியில் Marit Stiles தெரிவித்தார்

Marit Stiles 2018ஆம் ஆண்டு முதல் மாகாண சபையில் புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்

NDP தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளர் இவராவார்

அவர் Torontoவின் Davenport தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்,

Marit Stiles கட்சியின் கல்வி விமர்சகராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

முன்னர் கல்விச்சபை அறங்காவலராகவும் மத்திய NDPயின் தலைவராகவும் (president) இருந்துள்ளார்.

கடந்த June மாதம் மாகாணத் தேர்தல் தினத்தில் முன்னாள் NDP தலைவர் Andrea Horwath தனது பதவி விலகலை அறிவித்தார்.

அன்றில் இருந்து நீண்டகால புதிய ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Peter Tabuns இடைக்காலத் தலைவராக பணியாற்றினார்.

Related posts

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்

Lankathas Pathmanathan

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

Leave a Comment