February 23, 2025
தேசியம்
செய்திகள்

Grandparent scams மோசடியால் கடந்த ஆண்டு $9.2 மில்லியன் நிதி இழப்பு

Grandparent scams எனப்படும் முதியவர்களை குறிவைக்கும் மோசடியினால் கனடாவில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நிதி இழக்கப்பட்டுள்ளது.

கனடிய முதியவர்களைக் குறிவைக்கும் இந்த மோசடிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக காவல்துறையினர் இன்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்

RCMP, Ontario மாகாண காவல்துறை, கனேடிய மோசடி எதிர்ப்பு மையம் ஆகியவை இந்த எச்சரிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டன
2021ஆம் ஆண்டு இந்த மோசடியால் கனடாவில் 2.4 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நிதி இழக்கப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது
பெரும்பாலானவர்கள் தாம் மோசடி செய்யப்பட்டதாக புகாரளிக்காத காரணத்தினால், இந்த எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து முதல் 10 சதவீதத்தை மட்டுமே குறிக்கும் என கூறப்படுகிறது.

இந்த மோசடியில் அதிகளவு இழப்பு Ontarioவில் பதிவாகியுள்ளது.

Ontarioவில் கடந்த ஆண்டு 5.4 மில்லியன் டொலர்கள் இழக்கப்பட்டுள்ளன.

Albertaவில் 1.1 மில்லியன் டொலர்கள், Quebecகில் 732 ஆயிரம் டொலர்கள், British Columbiaவில் 322 ஆயிரம் டொலர்கள், Manitobaவில் 313 ஆயிரம் டொலர்கள் என இந்த இழப்புகள் பதிவாகியுள்ளன

Related posts

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

கனடா இப்போது தொற்றின் ஐந்தாவது அலையில் உள்ளது: NACI அறிக்கை

Lankathas Pathmanathan

Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தல் முடிவால் அரசியல் அதிர்வலைகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment