மத்திய அரசாங்கம் இறுக்கமான நிதி நிலையில் உள்ளது என நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland கூறினார்.
நிதியமைச்சர் Freeland மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களை வெள்ளிக்கிழமை (03) Torontoவில் சந்தித்தார்.
உலகப் பொருளாதாரம், அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகிதங்கள் ஆகியன புதிய செலவினங்களை முன்னெடுக்கும் மத்திய அரசின் திறனை கட்டுப்படுத்துகிறது என Freeland தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிதி நிலைமை குறித்து மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களிடம் வெளிப்படையாக இருந்ததாக Freeland கூறினார்.
நாம் உண்மையான நிதிப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது என இந்த சந்திப்பின் பின்னர் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை (07) பிரதமர் Justin Trudeau Ottawaவில் மாகாண, பிராந்திய முதல்வர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.