Toronto உட்பட கிழக்கு கனடாவின் பெரும்பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.
Torontoவில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை (03) இரவு குளிர் நிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
வெள்ளி இரவு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்நிலை -40 பாகை செல்சியஸ் வரை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
Quebec, Atlantic கனடாவின் பெரும்பகுதியிலும் கடுமையான குளிர் நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Ottawaவில் -30 பாகை செல்சியஸ், Montrealலில் -34 பாகை செல்சியஸ் Quebec Cityயில் பாகை செல்சியஸ் என வெள்ளி இரவு குளிர் நிலை உணரப்படும்.
January மாதம் நாடு முழுவதும் உணரப்பட்ட மிதமான காலநிலை இந்த மாதம் மாற்றமடையும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.