தேசியம்
செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும் என Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet தொடர்ந்தும் வலியுறுத்துகின்றார்.

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல் சிறப்பு பிரதிநிதியாக கடந்த வாரம் Amira Elghawaby நியமிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை காரணமாக அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என Quebec அரசியல்வாதிகள் பலரும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

தனது வார்த்தைகள் Quebec வாசிகளை காயப்படுத்தியதற்காக வருந்துவதாக Elghawaby புதன்கிழமை (01) மன்னிப்பு கோரியிருந்தார்.

புதன்கிழமை Bloc Quebecois தலைவரையும் அவர் சந்தித்திருந்தார்.

ஆனாலும் அவரது பதவி விலகலை Blanchet தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் அவர் நியமிக்கப்பட்ட பணியை ஆற்றுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நீதி அமைச்சர் David Lametti வியாழக்கிழமை (02) கூறினார்.

Elghawabyக்கு ஆதரவாக பிரதமர் Justin Trudeau தொடர்ந்தும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

2 மில்லியன் COVID தொற்றுக்களை தாண்டியது கனடா!

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Leave a Comment