December 12, 2024
தேசியம்
செய்திகள்

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டமூலம் March மாதம் 2024ஆம் ஆண்டு வரை மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிக்கிறது.

March 17, 2024 வரை இந்த தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் மசோதாவை நீதி அமைச்சர் David Lametti அறிமுகப்படுத்தினார்.

வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமூலத்தின் கீழ், மனநலக் கோளாறால் மட்டுமே பாதிக்கப்பட்ட கனடியர்கள் மருத்துவ உதவி பெறும் மரணத்திற்கு மேலும் ஒரு வருடத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.

குறுகிய கால கட்டத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற NDP, Bloc Quebecois கட்சிகளுடன் தனக்கு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக Lametti கூறினார்.

Senate சபையும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – செந்தில் மகாலிங்கம்

Lankathas Pathmanathan

கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment