தேசியம்
செய்திகள்

சீன பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை

சீனாவிலிருந்து வரும் பயணிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு கட்டாய COVID சோதனையை எதிர் கொள்ளவுள்ளனர்.

சீனா, ஹாங்காங், மக்காவோவிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை நடைமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

சீனா நீண்ட கால பொது சுகாதார கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், கனடா இந்த சோதனைகளை கட்டாயப்படுத்தியது.

இந்த சோதனை கட்டுப்பாடுகள் April 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என கனடாவின் பொது சுகாதார முகமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் COVID தொற்று எண்ணிக்கையின் அதிகரிப்பு குறித்து கனடிது அரசாங்கம் கவலை வெளியிட்டது.

Related posts

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan

Vaughan துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பிரதமர் இரங்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment