February 22, 2025
தேசியம்
செய்திகள்

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Markham Ontario விடுதியில் கடுமையான காயங்களுடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவானது.

செவ்வாய்க்கிழமை (31) பலத்த காயங்களுடன் இரண்டு மாத குழந்தை விடுதியில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.

கைதான சீனாவைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டதாக York பிராந்திய காவல்துறையினர் புதன்கிழமை (01) தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் குடும்ப உறுப்பினர் என்பதால், குழந்தை, சாட்சிகளின் அடையாளத்தை பாதுகாக்க அவரது பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை.

கைதான நபருக்கும் காயமடைந்த குழந்தைக்கும் உள்ள தொடர்பு குறித்த விபரங்களையும் காவல்துறையினர் குறிப்பிடவில்லை.

சம்பவத்தின் போது விடுதியில் வேறு குடும்ப உறுப்பினர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் அவசர உதவிக்கு அழைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

2023 ஆரம்பத்தில் கனடாவில் மந்தநிலை முன்னறிவித்தல்

Lankathas Pathmanathan

Olympics: ஆரம்ப விழாவில் Celine Dion இசை நிகழ்ச்சி

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment