கனடாவில் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்க உள்ளது.
விடுமுறை காலத்தில் நடைமுறையில் இருந்த விலை அதிகரிப்பு மீதான கட்டுப்பாடு முடிவுக்கு வருவதால், கனடா முழுவதும் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இலையுதிர்காலத்தில், Loblaw நிறுவனம் January 31 வரை அதன் அனைத்து No Name தயாரிப்புகளின் விலைகளை முடக்குவதாக கூறியது.
அதேவேளை பெரும்பாலான தனியார் தயாரிப்புகள், தேசிய தயாரிப்புகளின் விலைகள் February 5 வரை மாறாமல் இருக்கும் என Metro நிறுவனம் அறிவித்திருந்தது.
அதிகரித்து வரும் மளிகைப் பொருட்களின் விலைகள், வியாபார நிறுவனங்களின் வலுவான லாபத்தை ஆய்வு செய்வதில் அதிகரித்து வரும் நுகர்வோர் சீற்றத்தின் மத்தியில் இந்த விலை கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.