ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகம் என NDP விமர்சிக்கிறது.
Liberal அரசாங்கத்தின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson குற்றம் சாட்டினார்.
இந்த பொருளாதாரத் தடைகளின் எதிரொலியாக சில நிதிகள் முடக்கப்பட்டாலும் அவற்றில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.
பொருளாதாரத் தடைகள் குறித்து Liberal அரசாங்கம் பெரும் அறிக்கைகளை வெளியிட்டாலும் அதன் எதிரொலியாக அமுலாக்கம், விசாரணை, சொத்துகளின் பறிமுதல் என்பன நிகழ்வதில்லை என McPherson கூறினார்.
தடைகளை ஒரு குறியீட்டு கருவியாக கனடா பயன்படுத்துகிறது எனவும் McPherson குற்றம் சாட்டினார்.