December 12, 2024
தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டின் இறுதியில் அதிக அளவில் நிதியை திரட்டிய Conservative

Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் அதிக அளவில் நிதியை  திரட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் $9.7 மில்லியன்நிதியை Conservative கட்சி திரட்டியுள்ளது.

இது தேர்தல் இல்லாத காலாண்டில் நிதி திரட்டுவதற்காக அனைத்து கட்சிகளிடையேயான புதிய சாதனையாகும்.

Conservative கட்சி  60, 666 கனடியர்களிடமிருந்து இந்த நன்கொடைகளை பெற்றது.

People’s Party of Canada என்னும் மக்கள் கட்சி இதே காலத்தில் $725,293 நிதியை  திரட்டியுள்ளது.

இந்த நிதியை 5 ,851 நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளனர்.

Bloc Québécois கட்சிக்கும் வரலாற்று ரீதியாக வலுவான நிதி திரட்டும் காலாண்டாக இது அமைந்தது.

Bloc Québécois கட்சி இந்த காலத்தில் $866, 505 நிதியை  திரட்டியுள்ளது.

இந்த நிதியை 5 , 777  நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளனர்.

Justin Trudeau தலைமையிலான ஆளும் Liberal அரசாங்கம் 38,416 பங்களிப்பாளர்களிடமிருந்து $ 5.79 மில்லியன் நிதியாக இந்த காலாண்டில் திரட்டியது.

Jagmeet Singh தலைமையிலான NDP, $2.5 மில்லியன் 20, 352 நன்கொடையாளர்களிடமிருந்தும், பசுமை கட்சி 6, 270 நன்கொடையாளர்களிடமிருந்து $820, 796 நிதியாக பெற்றுள்ளது.

கனடிய தேர்தல் திணைக்களம் 2004 ஆம் ஆண்டு முதல் பிரதான கட்சிகளின் காலாண்டு நிதி அறிக்கைகளை தொடர்ந்து  76 காலாண்டுகளாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan

மருந்தக கட்டமைப்பு சட்டத்தை வலியுறுத்தும் NDP தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment