வாக்குறுதியளிக்கப்பட்ட திட்டங்கள், சேவைகளுக்கு 38 பில்லியன் டொலர்களை செலவழிக்க கடந்த ஆண்டு மத்திய அரசாங்க துறைகள் தவறிவிட்டதாக தெரியவருகிறது.
இதில் புதிய இராணுவ உபகரணங்கள், முன்னாள் படையினருக்கான ஆதரவு திட்டங்களும் அடங்குகின்றன.
COVID தொற்றால் ஏற்படும் தாமதங்கள், இடையூறுகள் உட்பட பல்வேறு காரணிகளை மத்திய அரசாங்கம் இதற்கு காரணமாக தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வருடங்களில் இந்த பணம் உபயோகத்திற்கு இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
2022ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட சிறிய பற்றாக்குறையை Liberal அரசாங்கம் வெளியிடுவதில் இந்த செலவழிக்கப்படாத நிதியும் பெரும் பங்கு வகித்தது.