தேசியம்
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட முதலாவது கனடிய பிரதமர் என்ற பெருமையை பெறும் Trudeau

கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau உரையாற்றினார்.

திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்ற இந்த நிகழ்வை Scarborough–Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, Oakville தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சருமான அனிதா ஆனந்த் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் Consevative கட்சித் தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh, பசுமை கட்சித் தலைவர் Elizebeth May உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு தமிழ் கனடியனாக பெருமைமிகு சமூகமொன்றை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமையடைவதாக தனது உரையில் கரி ஆனந்தசங்கரி கூறினார்.

இந்த நிகழ்வில் அனைத்து பிரதான கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருப்பது கனடிய தமிழ் சமூகத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக பிரதமர் Trudeau தனது உரையில் கூறினார்.

தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட முதலாவது கனடிய பிரதமர் Justin Trudeau என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario இலையுதிர் கால பொருளாதார அறிக்கை விரைவில்

Lankathas Pathmanathan

Leave a Comment