ரஸ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்காக போராட அல்லது உதவி வழங்க செல்லும் கனடியர்கள் எவரையும் கண்காணிக்கவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமக்கு போராளிகள் தேவை என கடந்த வருடம் February மாதம் அறிவித்த உக்ரேனிய ஜனாதிபதி, இதில் வெளிநாட்டவர்களும் பங்கேற்கலாம் என கூறினார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களின் கனடியர்களும் அடங்குகின்றனர்.
தம்முடம் இணைந்து போராடும் தேசிய இனங்களில் கனேடியர்கள் எண்ணிக்கையில் அதிகம் என உக்ரேன் கூறியது.
ரஷ்ய துருப்புக்களின் தாக்குதல்களில் மூன்று கனடியர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உக்ரைனில் போரில் ஈடுபட எத்தனை கனடியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதை அரசாங்கம் கண்காணிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இந்த விடயத்தில் தமது தரப்பில் இருந்து கண்காணிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என RCMP, கனடா எல்லை சேவைகள் நிறுவனம், கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை ஆகியனவும் கூறின.