தேசியம்
செய்திகள்

மீண்டும் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் Ottawa

Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவு போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி வருவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வார விடுமுறையில் எதிர்பார்க்கப்படும் இந்த போராட்டத்தில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதியில் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் சில பாதைகளில் தடைகளை ஏற்படுத்த நாடாளுமன்ற பாதுகாப்பு சேவை பிரிவு முடிவு செய்துள்ளது.

வார விடுமுறையில் நாடாளுமன்ற வளாகத்திற்கான பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள Wellington வீதியை வாகனப் போக்குவரத்திற்கு தொடர்ந்து மூடவுள்ளதாக Ottawa காவல்துறை கூறியுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்கள், எந்த ஒரு சாலை வழியிலும் வாகனங்கள் போக்குவரத்தை தடுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Related posts

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

கடந்த மாதம் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சியை பதிவு செய்தது

Lankathas Pathmanathan

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment