கனேடிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) மீண்டும் ஆரம்பமாகிறது.
இதற்கு தயாராகும் வகையில் Liberal, Conservative கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை (27) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்னதாக கட்சிகள் தமது வியூகங்களை அமைக்கும் வகையில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.