வாகன நிதி மோசடிகள் குறித்த குற்றச்சாட்டில் நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 16 சந்தேக நபர்கள் Durham, Ontarioவில் கைது செய்யப்பட்டனர்.
Project Navigator என பெயரிடப்பட்ட Toronto பெரும்பாகத்தில் நிகழ்ந்த பல வாகன நிதி மோசடிகள் குறித்த விசாரணையின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் ஒரு வாகன விற்பனையாளரும் அடங்குகின்றார்
இவர்கள் 16 பேர் மீது மொத்தம் 431 குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன
48 வாகனங்கள் வாகன விற்பனை நிலையங்களில் இருந்து மோசடியாக பெறப்பட்டதாக இந்த விசாரணையின் மூலம் தெரியவருகிறது.
இவற்றில் 19 வாகனங்கள் கனடாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
கைதான தமிழர்கள் Ajax நகரை சேர்ந்த 30 வயதான அனுஜன் தர்மகுலசிங்கம், Scarboroughவை சேர்ந்த 28 வயதான கஜபிரகாஷ் சற்குணராஜா, Markham நகரை சேர்ந்த 33 வயதான சஞ்சீவன் சந்திரகாந்தன், Oshawa நகரை சேர்ந்த 26 வயதான சதுஜன் ஸ்ரீகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.