COVID அவசர நிலை குறித்த உலக சுகாதார அமைப்பின் முடிவு கனடாவின் பதில் நடவடிக்கைகளை பாதிக்காது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.
COVID தொடர்ந்தும் உலகளாவிய சுகாதார அவசர நிலையை குறிக்கிறதா என்பதை உலக சுகாதார அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (30) அறிவிக்கவுள்ளது.
ஆனாலும் இந்த முடிவு கனடாவின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என Dr. Tam தெரிவித்தார்.
கனடாவில் COVID நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
கனடாவில் எங்கும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் Dr. Theresa Tam மேலும் தெரிவித்தார்.