கடுமையான பனிப்புயல் புதன்கிழமை (25) காலை முதல் தெற்கு Ontarioவைத் தாக்குகிறது.
இந்த பனிப்புயல் புதன்கிழமை இரவு முதல் கிழக்கு நோக்கி நகரும் என எதிர்வு கூறப்படுகிறது.
பெரும்பாலான தெற்கு, கிழக்கு Ontarioவில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
Toronto பெரும்பாகம் உட்பட பல பகுதிகளில் 25 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவை சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது.
வேகமாக குவிந்து வரும் பனி காரணமாக வீதிகளில் கடுமையான பயண நிலை எதிர் கொள்ளப்படுகிறது.
இதனால் ஏற்படக்கூடிய மின் தடைகள் குறித்தும் சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.
கிழக்கு Ontarioவில் புதன் பின்னிரவில் இருந்து வியாழன் காலை வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Ottawa, Kingston உட்பட கிழக்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.