Freedom Convoy போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும் என Ottawa காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் போல் வாகனங்களை உபயோகித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை Ottawa காவல்துறை ஏற்றுக் கொள்ளாது என Ottawa காவல்துறை தலைவர் Eric Stubbs தெரிவித்தார்.
Ottawa காவல்துறையினர் சாத்தியமான போராட்டம் குறித்த தகவல்களுக்காக உளவுத்துறையை கண்காணித்து வருவதாகவும் அமைப்பாளர்கள், ஏனைய பாதுகாப்பு துறைகளை அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் Ottawa காவல்துறை சபை Freedom Convoy 2.0 எதிர்ப்பு தயார் நிலை குறித்த விபரங்களை திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டது.