மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
அவ்வாறு பயன்படுத்துவது அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களை தடுக்கும் செயல் எனவும் Trudeau கூறினார்.
இந்த விடயத்தில் Quebec முதல்வர், பிரதமர் Trudeau மீது வார விடுமுறையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த உட்பிரிவின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதாக பிரதமர் பரிந்துரைத்தது, Quebec மாகாணத்தின் ஜனநாயகத்தை தாக்கும் ஒரு செயல் என Legault கூறினார்.
மாகாணங்கள் முன்கூட்டியே இந்த உட்பிரிவை பயன்படுத்தக்கூடாது என இதற்கு பதிலளிக்கும் வகையில் திங்கட்கிழமை (23) பிரதமர் கருத்து தெரிவித்தார்.
Bill 21 என அழைக்கப்படும் Quebec மதச்சார்பின்மை சட்டத்தின் மீது Legault’ அரசாங்கம் முன்கூட்டிய இந்த விதியை செயல்படுத்தியது.
அதிகார பதவிகளில் இருக்கும் சில பொது ஊழியர்கள் பணியில் மதச் சின்னங்களை அணிவதை இது தடை செய்கிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தை அடையும் போது தனது அரசாங்கம் அதில் தலையிட திட்டமிட்டுள்ளதாக Trudeau கூறியுள்ளார்.
ஆனாலும் Quebec மாகாணத்தின் சட்டங்களை அதன் சட்டசபை முடிவு செய்ய வேண்டும் என Legault தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.