கனடா தனது Francophone குடிவரவு இலக்கை கடந்த வருடம் எட்டியுள்ளது.
கடந்த ஆண்டில், கனடா முழுவதும் 16,300க்கும் மேற்பட்ட புதிய குடியேற்றவாசிகள் Francophone சிறுபான்மை சமூகங்களில் குடியேறியுள்ளனர்.
இன்று குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser தனது அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர், அரச கரும மொழிகள் அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருடன் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டார்
2006 ஆம் ஆண்டின் பின்னர் கடந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான Francophone புதிய குடியேற்றவாசிகள் கனடாவுக்குள் வரவேற்கப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் Quebec மாகாணத்திற்கு வெளியே 4.4 சதவீதம் பிரெஞ்சு மொழி பேசும் புலம்பெயர்ந்தோரின் இலக்கை அடைந்துள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.