February 22, 2025
தேசியம்
செய்திகள்

மேஜர்-ஜெனரல் Dany Fortin தவறான பாலியல் நடத்தையில் ஈடுபடவில்லை

மேஜர்-ஜெனரல் Dany Fortin தவறான பாலியல் நடத்தையில் ஈடுபடவில்லை என கனேடிய இராணுவம் தெரிவித்தது.

கடந்த ஆண்டின் இறுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து மூத்த இராணுவ அதிகாரியான Fortin விடுவிக்கப்பட்டார்.

இந்த மறுஆய்வு செயல்முறை எந்த நிர்வாக நடவடிக்கையையும் கோரவில்லை என கனேடிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நிர்வாக மறுஆய்வு தேவையில்லை எனவும் கூறப்படுகிறது.

Fortinனுக்கு அவரது பதவி, அனுபவத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான கடமைகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் அது எப்போது நிகழலாம் என்பதற்கான கால எல்லை வழங்கப்படவில்லை.

Related posts

மீண்டும் பணிக்கு திரும்பிய Canada Post ஊழியர்கள்!

Lankathas Pathmanathan

நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படும் Ontario பாடசாலைகள்

Gaya Raja

Niger அரசாங்கத்திற்கான உதவிகளை நிறுத்த கனடா முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment