2022இல் கனடாவின் கடுமையான வானிலை 3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 2022ஆம் ஆண்டு, கனேடிய வரலாற்றில் காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளுக்கு மூன்றாவது மோசமான ஆண்டாக அமைகிறது.
வெள்ளம், புயல், சூறாவளி என இந்த சேதங்கள் வேறுபட்டதாக கனடாவின் காப்பீடு மையம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு கனடாவின் ஒவ்வொரு பகுதியிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.
2022 இல் காப்பீடு செய்யப்பட்ட சேதத்தின் பெரும்பகுதிக்கு எந்த ஒரு நிகழ்வு அல்லது குறிப்பிட்ட பகுதியும் காரணமாக இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.