தேசியம்
செய்திகள்

McKinsey ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய முடிவு

McKinsey and Company ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழு ஒப்புக் கொண்டது.

2015ஆம் ஆண்டு முதல் McKinsey உலகளாவிய ஆலோசனை நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக பல அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன.

புதன்கிழமை (18) கூடிய அரசாங்க செயல்பாடுகள், மதிப்பீடுகள் குழு இந்த விடயம் குறித்து ஆராய ஒப்புக் கொண்டது.

தமது விசாரணையின் ஒரு பகுதியாக, ஏழு அமைச்சர்களிடம் நாடாளுமன்ற குழு கேள்வி எழுப்பவுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் பொதுச் சேவைகள், கொள்முதல் அமைச்சு 23 ஒப்பந்தங்களை McKinsey ஆலோசனை நிறுவனத்திற்கு வழங்கியதாக மத்திய அரசாங்கம் இந்த வாரம் உறுதி செய்தது.

இதன் மொத்த மதிப்பு 101.4 மில்லியன் டொலர்களாகும்.

Stephen Harper தலைமையிலான Conservative அரசாங்கத்தின் கீழ் McKinsey ஆலோசனை நிறுவனம் 2.2 மில்லியன் டொலர் ஒப்பந்தங்களை மாத்திரம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

McKinsey ஒப்பந்தங்கள் முறையாக வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்யுமாறு கொள்முதல் அமைச்சர் Helena Jaczek, கருவூல வாரியத் தலைவர் Mona Fortier ஆகியோரிடம் பிரதமர் Trudeau ஏற்கனவே கோரியுள்ளார்.

Related posts

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Gaya Raja

சீனாவின் COVID நிலை குறித்து அவதானித்து வரும் கனடிய பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment