கனடிய மத்திய வங்கி அடுத்த வாரம் மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது.
ஆனாலும் கனடிய வங்கி அடுத்த வாரம் அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
December மாதத்தில் நாட்டின் வருடாந்த பணவீக்க விகிதம் 6.3 சதவீதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் இந்த தகவலை புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டது.
மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வடைவதுடன் எரிவாயு விலை குறைவடைந்த நிலையில்இந்த அறிவித்தல் வெளியானது.
பின்னர் அது மெதுவாக குறைந்து வருகிறது.
மத்திய வங்கி கடந்த March மாதத்தில் இருந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது.
பல தசாப்தங்களாக உயர்ந்த பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ச்சியாக ஏழு முறை மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் தற்போது 4.25 சதவீதமாக உள்ளது.
இந்த நிலையில் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை அடுத்த வாரம் கால் சதவிகிதம் உயர்த்தும் என பெரும்பாலான வங்கிகள் எதிர்பார்க்கின்றன.