December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் இந்தியாவில் கைது

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடக்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மீது ஆள்கடத்தல் உட்பட குற்றச்சாட்டுகளை குஜராத் காவல்துறையினர் பதிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் January மாதம் 19ஆம் திகதி Manitoba மாகாணத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு எல்லைக் கடவைக்கு அருகில், கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Related posts

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

இந்த ஆண்டு தேர்தல் இல்லை: Ontario முதல்வர்!

Lankathas Pathmanathan

சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment